தூத்துக்குடி: ஹாக்கி வீரர்களுக்கு இடையே கைகலப்பு - 2 பேர் காயம்

by Editor / 25-10-2021 04:35:30pm
தூத்துக்குடி: ஹாக்கி வீரர்களுக்கு இடையே கைகலப்பு - 2 பேர் காயம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் கூசாலிபட்டி மற்றும் தெற்கு திட்டங்குளம் அணிகளுக்கு இடையே நேற்று மாலை ஹாக்கி போட்டி நடைபெற்றது. அப்போது, கூசாலிபட்டி ஹாக்கி வீரர் அரவிந்த், திட்டங்குளம் வீரர் சுந்தராஜ் ஆகியோர் ஒருவரை ஒருவர் இடித்துகொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றி இரு தரப்பு வீரர்களுக்கு இடையே கை கலப்பாக மாறியுள்ளது. இதில் அரவிந்த் சிங்கிற்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுந்தராஜுக்கும் லேசனா காயம் ஏற்பட்டுள்ளது.


காயமடைந்த வீரர்க்ள கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக அரவிந்த் சிங் கொடுத்த புகாரின் பெயரில் திட்டங்குளம் ஹாக்கி அணியை சேர்ந்த கரன், ஆனந்த், மனோஜ், மணி ஆகியோர் மீதும், சுந்தர்ராஜ் கொடுத்த புகாரின் பெயரில் சிவா,அரவிந்த், அசோக், விஜயக்குமார் ஆகியோர் மீது மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுதொடர்பாக இரு அணிகளையும் சேர்ந்த 8 பேர் மீது கோவில்பட்டி மேற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via