இனி எல்லாமே வாய் மொழிஉத்தரவுதான்.

by Editor / 31-08-2024 07:22:59pm
இனி எல்லாமே வாய் மொழிஉத்தரவுதான்.

யுபிஐ, நாட்டின் பணப்பரிவர்த்தனை நடைமுறையில் மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், யுபிஐ சேவையை மேம்படுத்துவம் வகையில், புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், யுபிஐ சேவையில் குரல் வழி பரிவர்த்தனை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இனி வாடிக்கையாளர்கள் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு தங்கள் மொபைல் எண் அல்லது யுபிஐ எண்ணை தட்டச்சு செய்ய தேவையில்லை. குரல் மூலமாகவே அவற்றை உள்ளீடு செய்து பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

 

Tags : இனி எல்லாமே வாய் மொழிஉத்தரவுதான்.

Share via
Logo