நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்
நாகை எம்.பி.யும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான செல்வராஜ் (67) உடல்நலக்குறைவால் இன்று(மே 13) காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவு 1 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
எம்.பி. செல்வராஜ், 1989, 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர். அவர் மரணம் அடைந்துள்ள சம்பவம் கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :