பெண் முதல்வராக இருந்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம்

by Editor / 28-06-2025 05:14:22pm
பெண் முதல்வராக இருந்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம்

கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவி கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் மம்தா பானர்ஜி அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் செளத்ரி, "மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு பெண் முதல்வராக இருந்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் குற்றவாளிகளை பாதுகாக்கிறது. அதே நேரம் பெண்கள் பாதுகாப்பு குறித்து பாஜக அரசியல் நாடகம் போடுகிறது" என்றார். 
 

 

Tags :

Share via