பொள்ளாச்சி சந்தையில் ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை

by Admin / 04-08-2021 02:14:59pm
பொள்ளாச்சி சந்தையில் ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை

 



   
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கோவை மாவட்ட நிர்வாகம் இன்று முதல் பொள்ளாச்சி மாட்டுச்சந்தையை மூட உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி மாட்டு சந்தை நேற்று நடைபெற்றது. வழக்கத்தை விட வியாபாரிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
 
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கோவை மாவட்ட நிர்வாகம் இன்று (4-ந் தேதி) முதல் பொள்ளாச்சி மாட்டுச்சந்தையை மூட உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாகவே நேற்று சந்தையில் வியாபாரிகள் அதிகம் கூடியிருந்தனர்.

நேற்று சந்தைக்கு கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

சந்தைக்கு 2500 மாடுகள் வந்திருந்தன. 1000 வியாபாரிகள் வரை வந்து மாடுகளை வாங்கி சென்றனர். இதன் காரணமாக விற்பனை அமோகமாக இருந்தது.

காங்கேயம் காளை ரூ.65 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையும், நாட்டு பசு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், எருமை ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், மொரா ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், செர்சி ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது.

நேற்று மட்டும் சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

 

Tags :

Share via