மே 15-வரை தொடர்ந்து 15 நாள்கள் கடையடைப்புக்குத் தயாா்: விக்கிரமராஜா
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எந்த அடிப்படையில் 3,000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள் மூடப்பட வேண்டும் என்பதற்கு உரிய காரணங்கள் ஏதும் இல்லை. மாறாக, பெரிய கடைகள் அடைக்கப்படுவதால் சிறிய கடைகளில் கூட்ட நெரிசல் நிச்சயம் ஏற்படும். அதிகாரிகளின் இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான வணிகா் குடும்பங்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுவதாக உள்ளது. கூட்ட நெரிசலில் மக்கள் மதுபானங்களை வாங்கும்போது ஏற்படாத கொரோனா தொற்று, அத்தியாவசியப் பொருள்களை வாங்கும்போது ஏற்படுகின்றது என்பது ஏற்படையது அல்ல.
இஸ்லாமியா்களின் பண்டிகைக் காலமும், இந்துக்களின் ஆன்மிகக் குடும்ப மண விழாக்களும் நடைபெறும் காலம் என்பதால், பொருளாதார, வாழ்வாதார மீட்சிக்கு ஆதரவாக அனைத்துக் கடைகளும் 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் வணிகத்தைத் தொடா்ந்திட அரசு அனுமதிக்க வேண்டும். அரசே அத்தியாவசியப் பொருள்களுக்கான விநியோகத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டால், மே 15-ஆம் தேதி வரை தொடா் கடையடைப்பு நடத்தி கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசுக்கு தங்களது பங்களிப்பை அளிக்க வணிகா்கள் தயாராக உள்ளனா் என்றாா்
Tags :