மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து.. அமைச்சர் எச்சரிக்கை

தமிழக பாஜக சார்பில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக 'சமக்கல்வி எங்கள் உரிமை' எனும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி நேற்று (மார்ச் 6) பாஜகவினர் கையெழுத்து வாங்கினர். இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் கடுமையாக எச்சரித்துள்ளார். அவர் கூறியதாவது, "மும்மொழி கொள்கைக்காக மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
Tags :