ஒரே ஆண்டில் 30 முறை துபாய் விசிட்.. தங்கம் கடத்திய நடிகை

by Editor / 07-03-2025 02:13:27pm
ஒரே ஆண்டில் 30 முறை துபாய் விசிட்.. தங்கம் கடத்திய நடிகை

துபாயிலிருந்து சுமார் 15 கிலோ தங்கம் கடத்தி வந்த நடிகை ரன்யா ராவின் அடுக்குமாடி குடியிருப்பில் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 2 கிலோ தங்க நகைகள் மற்றும் இரண்டரை கோடி ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஒரே வருடத்தில் 30 முறை துபாய்க்கு சென்று வந்த நடிகைக்கு தங்கக் கடத்தல் கும்பலுடன் உள்ள தொடர்பு என்ன?
கர்நாடகா மாநிலம் சிக்மக்ளூரைச் சேர்ந்த நடிகை ரன்யா ராவ். மொத்தம் மூன்றே படங்களில் தான் நடித்துள்ளார். 2014-ம் ஆண்டு அறிமுகமாகி 2017-ம் ஆண்டோடு தனது நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார். சினிமாவில் நல்ல வாய்ப்புகள் இருந்த போதே எங்கு போனார் எனத் தெரியாத நிலையில்தான் தற்போது தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருக்கிறார். இவரது வளர்ப்புத் தந்தை ஏடிஜிபி ராமச்சந்திர ராவின் பெயரைப் பயன்படுத்தி பலமுறை தப்பி வந்தவர் தற்போது வசமாக சிக்கியிருக்கிறார்.

 

Tags :

Share via