நாடாளுமன்றத்திற்கு செல்லும் திமுக எம்பிக்கள் வீணாக சண்டையிடாமல் மக்களுக்கான திட்டங்களை பெற்று தர வேண்டும் என வி கே  சசிகலா பேச்சு

by Editor / 19-07-2024 12:28:30am
நாடாளுமன்றத்திற்கு செல்லும் திமுக எம்பிக்கள் வீணாக சண்டையிடாமல் மக்களுக்கான திட்டங்களை பெற்று தர வேண்டும் என வி கே  சசிகலா பேச்சு

தென்காசி மாவட்டத்தில் இன்று அம்மா வழியில் மக்கள் பயணம் என்கிற தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாம் நாளை மேற்கொண்ட , வி கே சசிகலா செங்கோட்டை, புது கேசவபுரம் புளியரை அச்சன் புதூர் வடகரை பண்பொழி கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்த நிலையில் செங்கோட்டையில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மக்களிடம் உரையாற்றிய சசிகலா  

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவை சேர்ந்த எம்பிக்கள் தான் நாடாளுமன்றத்திற்கு சென்று வந்ததாகவும் சமீபத்தில் நடந்த தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெற்றுள்ளதாகவும்

நாடாளுமன்றத்திற்கு செல்லும் எம்பிக்கள் வீணாக சண்டையிடாமல் மக்களுக்கான திட்டங்களை பெற்று தந்தால் நன்றாக இருக்கும் என அவர் தெரிவித்தார். 
தமிழகத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிறிய நகராட்சியான செங்கோடு நகராட்சிக்கு திமுக அரசால் எதுவும் செய்யாத பொழுது தமிழ்நாட்டிற்கு இவர்கள் என்ன செய்து விடுவார்கள். தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்கு தமிழக வாகனங்களில் தினமும் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன இன்னும் கொஞ்ச நாள்களில் மேற்கு தொடர்ச்சி மலையே இல்லாமல் போய்விடும் இனி மேற்கு தொடர்ச்சி மலை இருக்குமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் அவர் தெரிவிக்கும்போது தென்காசி மாவட்டத்தில் 32 கல்குவாரிகள் இருக்கின்றன அந்த 32 கல்குவாரிகளில் 9 கல்குவாரிகள் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள் 10 சக்கரங்கள் கொண்ட வாகனத்தில் 19 டன் கனிம வளம் ஏற்றலாம் ஆனால் தற்பொழுது முப்பாட்டன் வரை ஏற்றப்பட்டுள்ளது அதேபோன்று 12 சக்கரங்கள் கொண்ட வாகனத்தில் 21 டன் வரை ஏற்றலாம். அதற்கு தான் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது ஆனால் 40 டன் வரை கற்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன 16 சக்கரங்கள் உள்ள வண்டியில் 25 டன் வரை ஏற்றலாம் ஆனால் அந்த வாகனங்களில் 50 டன் கல் கொண்டு செல்லப்படுகிறது தமிழக அரசின் ஆதரவு இல்லாமல் எப்படி கேரளாவிற்கு இவ்வளவு காலம் கொண்டு போக முடியும் கனிம வளம் ஏற்றிவிடும் நிறுவனங்களை சோதனை செய்து மூடுவதை விட்டுவிட்டு அதனை ஏற்றிச்செல்லும் ஓட்டுநர்கள் மீது வழக்கு போடுவது எந்த விதத்தில் நியாயம் கணவனை காணவில்லை என்று மனைவி தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றார் மேலும் மின் கட்டணம் உயர்வால் விலைவாசிகள் உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் அம்மா வழியில் மக்களை நம்பி சுற்றுப்பயணம் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார் மேலும்

 பேசியவர் தற்போது திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும் அதற்கு காரணம் திமுகவினர் பதவிகளில் இருப்பதாகவும் என குற்றச்சாட்டை தெரிவித்தார்.

 

Tags : நாடாளுமன்றத்திற்கு செல்லும் திமுக எம்பிக்கள் வீணாக சண்டையிடாமல் மக்களுக்கான திட்டங்களை பெற்று தர வேண்டும் என வி கே  சசிகலா பேச்சு

Share via