சிக்கன் பிட்ஸ் செய்முறை

தேவை
கோழிக்கறி – 500 கிராம் (அரைக்க வேண்டும்)
இஞ்சி பூண்டு – அரைத்தது 2 ஸ்பூன்
மைதா மாவு – 100 கிராம்
உப்பு – சுவைக்கேற்ப
பட்டை மிளகாய்தூள் – 3 ஸ்பூன்
கடலை மாவு – 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 200 மி.லி.
செய்முறை
அரைத்த கோழிக்கறி, அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு, எல்லாவற்றையும் ஒன்றாக பிசைந்து கொள்ளவும். கோழிக்கறி மிளகாய் வடிவத்தில் பிடிக்கவும். கடலைமாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பிடித்து வைத்துள்ள கோழிக்கறி பிட்ஸ்களை தேங்காய் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இது மிகவும் சுவையாக இருக்கும்.
Tags :