தனியார் பள்ளிக்கு சீல்.. அதிரடி காட்டிய அதிகாரிகள்

by Staff / 07-05-2023 05:01:56pm
தனியார் பள்ளிக்கு சீல்.. அதிரடி காட்டிய அதிகாரிகள்

திருவள்ளூர் மாவட்டம் அத்திபட்டில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மே 1, ஆம் தேதி கழிவு நீர் தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட கோவிந்தன் (45) சுப்புராயலு (46) ஆகியோர் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில்,இதைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்டார். மேலும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 15 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், பள்ளி நிர்வாகம் நஷ்ட ஈடு வழங்காததால், பள்ளியை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்

 

Tags :

Share via

More stories

Logo