வைகோவின் சமத்துவ நடை பயணத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இன்று திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடை பயணத்தை திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை திடலில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். சமூகத்தில் சகோதரத்துவத்தை வளர்க்கவும் சமத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் போதை பொருள் ஒழிப்பு ஆகிய வலியுறுத்தும் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது திருச்சியில் தொடங்கும் இந்த நடை பயணம் 175 கிலோமீட்டர் தொலைவை 10 நாட்கள் நடைபெற்று ஜனவரி 12-ஆம் ஆண்டு மதுரையில் முடித்துக் கொள்கிறார் 2026 சட்டமன்ற தேர்தல் காண மாதிகாவின் தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாகவும் இது அமைய உள்ளது. நடை பயணத்தை தொடக்க விழாவில் அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
Tags :



















