போதைப்பொருள் வழக்கில் கைதான தமிழ்ப்பட நடிகைக்கு ஜாமீன்

by Staff / 15-06-2024 04:42:07pm
போதைப்பொருள் வழக்கில் கைதான தமிழ்ப்பட நடிகைக்கு ஜாமீன்

தமிழில் ஈரமான ரோஜாவே, அழகிய தமிழ்மகன், சத்யம், தேவி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹேமா. இவர் தெலுங்கிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். பெங்களூரு புறநகர் பகுதியில் சில வாரங்களுக்கு முன் பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் போதைப்பொருளும் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இவ்வழக்கில் நடிகை ஹேமா உட்பட 8 பேரை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் அழைத்தும் ஆஜராகவில்லை.அதனால் ஹேமா கடந்த 3ம் தேதி கைதானார். தனக்கு ஜாமீன் வழங்கும்படி சிறப்பு நீதிமன்றத்தில் ஹேமா தரப்பில் முறையிடப்பட்டது. இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

 

Tags :

Share via