சங்கரநாராயண சாமி கோயில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோயில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதற்காக தவம் இருக்கும் கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமி சங்கர நாராயணராக காட்சியளிக்க கூடிய நிகழ்வே ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை வேத மந்திரங்கள் முழங்க சங்கரலிங்க சுவாமி சந்நிதி முன்பு உள்ள கொடி மரத்திற்கு கொடியேற்றப்பட்டது. பின்பு கொடி மரத்திற்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார செய்யப்பட்ட கொடி மரத்திற்கு மகாதீபாரதனையும் காண்பிக்கப்பட்டது.12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான அடித்த பசு காட்சி வரும் ஏழாம் தேதி நடைபெற உள்ளது.
Tags : சங்கரநாராயண சாமி கோயில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.














.jpg)




