ரஷ்யாவில் நீர்வீழ்ச்சியின் 230 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது கார் விபத்து 4 பேர் உயிரிழப்பு

by Editor / 24-07-2022 05:14:17pm
ரஷ்யாவில் நீர்வீழ்ச்சியின் 230 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது கார் விபத்து 4 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் 230 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். ஆற்றில் உள்ள நீர் வீழ்ச்சியைப் பார்க்க சென்ற சுற்றுலா பயணிகள் குன்றின் விளிம்பில் காரை நிறுத்த முயன்ற போது கடும் பனி மூட்டத்தால் எதிரே பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்தனர். நீண்ட தேடுதலுக்கு பிறகு இரண்டு சிறுவர்கள் உள்பட 4 பேரின் உடல்களை மீட்புப்படையினர் மீட்டனர்.

 

Tags :

Share via