குடும்பத் தகராறில் பெண் தற்கொலை
திருமங்கலம் அடுத்த கூத்தியார் குண்டைச் சேர்ந்தவர் முனி கிருஷ்ணன் இவரது மனைவி அங்காள ஈஸ்வரி முனிகிருஷ்ணன் டாஸ்மாக்கில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். தம்பதிகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் ஆத்திரமடைந்த முனிகிருஷ்ணன் வீட்டிலிருந்து வெளியேறினார்.இதனால் மனம் உடைந்த அங்காள ஈஸ்வரி வீட்டில் விஷம் குடித்து மயங்கினார் அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கு சிகிச்சை பலனின்றி அங்காள ஈஸ்வரி நேற்று பலியானார். இதுகுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :