மீனவர்களை தாக்கி மீன்பிடி வலை ,டீசல் உள்ளிட்டவைகளை பறித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்
நாகை மாவட்டம் செருதூர் பகுதி மீனவர்கள் கடந்த எட்டாம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தி முனையில் மிரட்டி 4 பைபர் படகில் இருந்த 770 கிலோ மீன்பிடி வலை அபகரிப்பு, 100 லிட்டர் டீசல், ஜிபிஎஸ் செல்போன் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை அபகரித்து சென்றுள்ளனர்.இந்தநிலையில் மீனவர்கள் பொருட்களை பறிகொடுத்த நிலையில் இன்று கரை திரும்பி உள்ளனர்.இலங்கை கடற்கொள்ளையர்கள் தங்களை கத்தி முனையில் மிரட்டியதோடு தாக்க முற்பட்டதாகவும், கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.மேலும்.இதுகுறித்து கீழையூர் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags : மீனவர்களை தாக்கி மீன்பிடி வலை ,டீசல் உள்ளிட்டவைகளை பறித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்