பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குழு அமைக்கவில்லையா..ரூ.50,000 வரை அபராதம்.

by Editor / 10-10-2024 10:15:34am
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குழு அமைக்கவில்லையா..ரூ.50,000 வரை அபராதம்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண்கள் அச்சமில்லாமல் புகாரளிக்க “அச்சம் தவிர்” என்ற தனித்துவமான QR Code மூலம் புகார் படிவம் உருவாக்கப்பட்டு உள்ளது.

10க்கும் மேற்பட்ட நபர்கள் பணிபுரியும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக புகார் அளிக்க புகார் குழு அமைக்கப்பட வேண்டும்.  புகார் குழுவில் நான்கு உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும். இக்குழுவின் தலைவராக நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த பெண் பணியாளரை நியமிக்க வேண்டும்.

உறுப்பினர்களாக பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் இரண்டு பணியாளர்கள் மற்றும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அல்லது பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையை பற்றி தெரிந்த நபரினை நியமிக்க வேண்டும். இக்குழுவில் 50% பெண் உறுப்பினர்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும். உள்ளக புகார் குழு அமைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது புகார் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தாலோ சம்பந்தபட்ட நிறுவனங்களின் உரிமம் அல்லது பதிவு ரத்து செய்யப்படும்.

இப்புகார்குழு அமைக்கபடாத பட்சத்தில் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் 10 நபர்களுக்கு அதிகமாக பணிபுரியும் இடங்களில் உள்ளக புகார் குழு அமைக்கப்பட்டு, அதன் விவரத்தினை அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண்கள் அச்சமில்லாமல் புகாரளிக்க ‘அச்சம் தவிர்" என்ற தனித்துவமான QR Code மூலம் புகார் படிவம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது பெண்கள் தயக்கமில்லாமல் மற்றும் எவ்வித அச்சமில்லாமல் புகாரளிக்க மிகவும்உதவியாக இருக்கும் எனவும் புகார் அளிக்கும் பெண்கள் தங்களது சுய விவரங்கள் எதுவும் குறிப்பிடாமல் புகாரளிக்கலாம்.

 

Tags : பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குழு அமைக்கவில்லையா..ரூ.50,000 வரை அபராதம்.

Share via
Logo