ரயில் நிலையத்தில் பயணிகள் மீது கல்வீசி தாக்குதல்
சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் ரயில் நிலையத்தில் நபர் ஒருவர் ரயில் மீதும், பயணிகள் மீதும் கற்களை கொண்டு சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சள் நிற ஆடையில் இருக்கும் அந்த இளைஞர் அங்குமிங்கும் ஓடியபடி கல்வீசி தாக்கினார். இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ள நிலையில் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :