by Staff /
04-07-2023
04:26:10pm
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மேலும் நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த அவர், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் ஆதாரங்கள் அழிக்கப்படுவதாக அமலாக்கத்துறை தெரிவித்ததை அடுத்து, வழக்கு ஜூலை 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Tags :
Share via