அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் ஜூன் 17 புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் .
அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் ஜூன் 17 புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தி.மு.க தலைவர் மு .க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதால், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக கொறடா எ.வ.வேலு அழைப்பு விடுத்துள்ளார். ஜூன் 18ஆம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்துடன் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதால், அதற்கு முன்னதாக இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக ஆளுநர் உரைக்கு எவ்வாறு பதில் அளிப்பது என்றும் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் விவாதிக்க உள்ளது. தமிழக வெற்றிக்கழக அரசு அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் மக்கள் தேவைகள் மற்றும் புதிய உத்திகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுவதோடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் நல்க உள்ளது.
Tags :



















