கிரிவலப் பாதையில் உள்ள இரண்டு புளிய மரங்கள் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வேரோடு சாய்ந்தது......
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் பலத்த காற்று இடிடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக நூறு ஆண்டுகள் முதிர்ந்த இரண்டு புளிய மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் புளிய மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிரிவலப் பாதையில் உள்ள பஞ்சமுக தீர்த்தம் அருகே 100 ஆண்டுகள் முதிர்ந்த புளியமரம் மற்றும் போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் அருகே இருந்த புளியமரம் வேரோடு போக்குவரத்துக்கு இடையூறாக கிரிவலப் பாதையில் சாய்ந்தது. பொது மக்களுக்கு இடையூறாக சாய்ந்த மரங்களை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்ணாமலையார் கோவிலின் கிரிவலப் பாதையில் அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து செல்கின்றனர். கிரிவலம் வரும் பக்தர்களுக்கு இடையூறாக அவ்வப்பொழுது காய்ந்த மரங்களின் கிளைகள் வாகன ஓட்டிகள் மீதும் கிரிவலம் செல்லும் பக்தர்கள் மீதும் விழுந்து விபத்து ஏற்படுகிறது. கிரிவலம் வரும் பக்தர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ள காய்ந்த மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கிரிவலம் வரும் பக்தர்களும், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags :