தீ விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவி .
நேற்று திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக தல 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார் .திண்டுக்கல் காந்தி நகரில் டாக்டர் முரளிதரன் என்பவர் நடத்தி வந்த சிட்டி எலும்பு முறிவு மருத்துவமனையில் நேற்று இரவு 9 மணி அளவில் வரவேற்பு அறையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு ,அது மெல்ல மெல்ல நாலு மாடிகளுக்கும் பரவியது .இதில் உள்நோயாளியாக தங்கி இருந்த பலர் தீ விபத்தின் காரணமாக மூச்சு திணறிய நிலையில் ,அங்கிருந்த பணியாளர்கள் அவர்களை விரைவாக மீட்க முற்பட்டனர். தீயணைப்பு துறையினர் நான்குஅடுக்குகளிலும் பரவிய தீயை அணைப்பதற்கு கடுமையாக போராடினர் இந்நிலையில், லிப்டின் பயணித்த மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள் ஒரு பெண் குழந்தை மூச்சு திணறி உயிரிழந்தனர் மேலும். சிகிச்சைக்கு வந்திருந்த 100க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறி மயங்கிய நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
Tags :