உக்ரேனிய இந்த வான்வழி தாக்குதலுக்கு ரஷ்யா கடும் பதிலடி கொடுக்கும்.

by Admin / 28-11-2024 10:49:13am
 உக்ரேனிய இந்த வான்வழி தாக்குதலுக்கு ரஷ்யா கடும் பதிலடி கொடுக்கும்.

உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் அதி நவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பான எஸ் 400 ஐ அழித்து தம் சாதனையை நிகழ்த்தியுள்ளது. அமெரிக்கா வழங்கிய இந்த ஏவுகணை வெகுதூரம் சென்று அழிக்க கூடியதுஉக்ரைனின் இந்த வெற்றியை ரஷ்யா ஏற்றுக் கொண்டுள்ளது. இருப்பினும், உக்ரேனிய இந்த வான்வழி தாக்குதலுக்கு ரஷ்யா கடும் பதிலடி கொடுக்கும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைன் ராணுவத்தின் இந்த தாக்குதல் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைப்பினை விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. நீண்ட தூரம் ஏவக்கூடிய இந்த ஏவுகணையை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்ததில் இருந்து ரஷ்யாவிற்கும் உக்கிரேனுக்கும் இடையே ஒரு பெரும் பதட்டமான சூழல் உருவாகி இருந்தது. இந்நிலையில் உக்ரைனுக்கு பதிலடி கொடுப்பதற்கு ஏதுவாக ரசியா வட கொரியா வீரர்களை களம் இறக்க உள்ளதாகவும் தெரிகிறது. ரஷ்யா புதிய பலம் பொருந்திய ஏவுகணைகளான ஓர் சேனீக்  பயன்படுத்தலாம் என்றும் தெரிகிறது.ஆயிரம் நாட்களுக்கு மேலே நடைபெறும் இந்தப் போர் எப்பொழுது முடிவுக்கு வரும் என்று சொல்வதற்கு இல்லாமல் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

 உக்ரேனிய இந்த வான்வழி தாக்குதலுக்கு ரஷ்யா கடும் பதிலடி கொடுக்கும்.
 

Tags :

Share via