பிரியங்கா காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார். அவருக்கு பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார். பாராளுமன்ற தேர்தலில் வயநாட்டில் நின்று வெற்றி பெற்ற ராகுல் காந்தி இரண்டு தொகுதியில் போட்டியிட்டதன் காரணமாக வயநாடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தேர்தல் ஆணையம் வயநாட்டில் தேர்தலை நடத்தியது. இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிட்டார். இவர் நான்கு லட்சத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
Tags :