11 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த நபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை.
சேலம் ஏத்தாப்பூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த முருகேசன்(40) என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படித்து உடல்நிலை சரியில்லாமல் இருந்த 11 வயது நிறைந்த பெண் குழந்தையை தனது தாய் கடைக்கு அனுப்பி இருந்த நிலையில் முருகேசன் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றத்திற்காக ஏத்தாப்பூர் காவல்துறையிடம் போக்சோ வழக்குபதிவு செய்தனர்.
இந்த வழக்கில் விரைவான குற்றபத்திரிகை தாக்கல் செய்து சேலம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது.இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் சுதா சிறப்பாக வாதாடி சாட்சிகளின் அடிப்படையில் முருகேசன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது.சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக இன்று நீதிபதி ஜெயந்தி அவர்களால் ஏழு ஆண்டுகள் சிறைதண்டனையும், 2000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.பின்னர் முருகேசன் சிறையில் அடைக்கப்பட்டார்
Tags :


















