சென்னையில் என்ஐஏ அதிரடி சோதனை விடுதலைப்புலிகள் புத்தகம், செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல்

by Editor / 14-08-2021 05:33:39pm
 சென்னையில் என்ஐஏ அதிரடி சோதனை விடுதலைப்புலிகள் புத்தகம், செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல்


 

சென்னையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நடத்திய அதிரடி சோதனையில், விடுதலைப்புலிகள் சம்பந்தமான புத்தகம் மற்றும் செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


சென்னை, திருவள்ளூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை நடத்திய சோதனையில், விடுதலைப்புலிகள் சம்பந்தமான புத்தகம் மற்றும் செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் கேரள மாநிலத்தின் விழிஞம் கடற்கரைப்பகுதியில் இலங்கையை சேர்ந்த 6 பேர் படகில் சென்றபோது அவர்களிடம் போலீசார் சோதனை நடத்தினர். போலீசார் நடத்திய சோதனையில் 100 கிலோ ஹெராயின் போதைப் பொருள், ஏகே 47 துப்பாக்கி மற்றும் ஆயிரம் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 


இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை கடந்த மே மாதம் வழக்கு பதிவு செய்து, அந்த 6 பேரிடமும் விசாரணை நடத்தியது. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் இந்த விசாரணையில் அந்த ஆறு நபர்கள் பல்வேறு தகவல்களை கொடுத்துள்ளனர்.
அந்த தகவல்களின் அடிப்படையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து  சென்னை, திருவள்ளூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். 
இதில், விடுதலைப்புலிகள் தொடர்பான புத்தகங்களுடன் மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

 

Tags :

Share via