அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல்..பரிந்துரைத்த 3 பேரையும் நிராகரித்தார் ஆளுநர்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தேடல் குழு பரிந்துரைத்த 3 பேரையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்துள்ளார்.
காலியாக உள்ள காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக தேடல் குழு 3 பேரை பரிந்துரைத்தது.
இந்நிலையில் 3 பேரையும் நேர்காணல் செய்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணைவேந்தர் பதவிக்கு மூன்று பேரும் தகுதியானவர்கள் இல்லை என்று பல்கலைக்கழக பதிவாளருக்கு ஆளுநரின் செயலாளர் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும், புதிய தேடல் குழுவை நியமித்து, மீண்டும் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்களைப் பெற்று தகுதியான 3 பேரை பரிந்துரைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு வெளிமாநிலத்தைச் சேர்ந்தவரை துணைவேந்தராக தேர்வு செய்யக்கூடாது என்று அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், ஆளுநரின் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :