பலாத்கார முயற்சி.. செல்போனில் பதிவான அதிர்ச்சி

by Staff / 05-02-2025 01:32:00pm
பலாத்கார முயற்சி.. செல்போனில் பதிவான அதிர்ச்சி

கேரளாவின் கோழிக்கோட்டில் பாலியல் வன்கொடுமை முயற்சியில் இருந்து தப்பிக்க கட்டிடத்திலிருந்து குதித்த 24 வயது இளம் பெண்ணின் மொபைல் போனில் பதிவான வீடியோ வெளியாகியுள்ளது. புதிதாக திறந்த ஹோட்டல் ஒன்றில் ரிசப்ஷனிஸ்டாக பணிபுரிந்த அந்த பெண்ணை அந்த ஹோட்டலின் ஓனர் தேவதாஸ், ஊழியர் ரியாஸ் மற்றும் வாட்ச்மேன் சுரேஷ் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க முதல் மாடியிலிருந்து அப்பெண் குதித்துள்ளார். தற்போது தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

 

Tags :

Share via