சிவகங்கை அருட்பெருஞ்ஜோதி யாகம் ஏராளமான பக்தர்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் மகா யோகத்தின் அமைப்பு சார்பில் அருட்பெருஞ்ஜோதி யாகம் நடைபெற்றது யாகத்தில் ஏராளமான பக்தர்கள் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர் முன்னதாக மேடையில் அருட்பெருஞ்ஜோதி படத்தை வைத்து சுற்றியும் திருவிளக்கு ஏற்றியும் அலங்கரித்தனர் அருகே யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் துவங்கியது பழங்கள் 108 மூலிகைப் பொருட்கள் கொண்டு யாகம் வளர்த்து 108 போற்றி கூறப்பட்டது ஏராளமான பக்தர்கள் வரிசையாக அமர்ந்து அகல் விளக்கு தீபம் ஏற்றி உதிரிப்பூக்கள் கொண்டு விளக்குப் பூஜை செய்து வழிபாடு செய்தனர் நிறைவாக மன அமைதி வேண்டியும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உடல் நலனுக்காகவும் மன அழுத்தத்தைக் குறைத்து ஞாபக சக்தி திறன் மேம்படுத்தவும் விளக்குப் பூஜை செய்து வழிபாடு செய்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags :


















