ஃபேஸ்புக் உபயோகிப்பாளர்களுக்கு அதிர்ச்சி

by Staff / 20-02-2023 11:52:14am
ஃபேஸ்புக் உபயோகிப்பாளர்களுக்கு அதிர்ச்சி

ஃபேஸ்புக் புளூ டிக்கிற்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதில், ஆப்பிள் பயனர்கள் மாதம் ரூ.1,240 செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே ட்விட்டர் நிறுவனம் புளூ டிக்கிற்கு கட்டணம் வசூலித்து வருகிறது. இது இந்த வாரம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அறிமுகமாகிறது.இந்த நடவடிக்கை சமூக ஊடக பயன்பாடுகளில் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் என்று மெட்டா தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் கூறினார்.

 

Tags :

Share via