இளம்பெண்ணுடன் அடிக்கடி உல்லாசம்... ஆசிரியர் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீச்சு

by Staff / 05-06-2024 04:56:23pm
 இளம்பெண்ணுடன் அடிக்கடி உல்லாசம்... ஆசிரியர் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீச்சு

கடலூர் கம்மியம்பேட்டையில் உள்ள பள்ளியில் ஆண்டிமடத்தை சேர்ந்த விக்டர் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்தார். மனைவியுடன் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகரில் வசித்து வந்த நிலையில் மே 18ம் தேதி வெளியில் சென்ற விக்டர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து விக்டரின் தாய் மற்றும் உறவினர்கள் தேடி கிடைக்கவில்லை. இது குறித்து புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குறிஞ்சிப்பாடிக்கு சென்று அப்பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தியை பிடித்து விசாரித்தனர். அவர் கூறியதாவது,ஆசிரியர் விக்டர் திருமணமாகாத பெண்ணுடன் பழக்கத்தில் இருந்தார். அந்த பெண் என்னிடம் தெரிவித்ததால் விக்டரை பல முறை கண்டித்தேன். அவர் அந்த பெண்ணுடன் இருந்த பழக்கத்தை விடவில்லை. மே 18-ம் தேதி விக்டரை தாக்கியதில் உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி அதை பைக்கில் எடுத்து சென்று நெய்வேலி டவுன்ஷிப் தீயணைப்புதுறை அலுவலகத்துக்கு பின்புறத்தில் வீசியதாக கூறினார்.
இதையடுத்து போலீஸார் பார்த்தபோது அந்த இடத்தில் எலும்புக் கூடு இருந்தது. போலீஸார் எலும்புகூடை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தட்சிணாமூர்த்தி மற்றும் அந்த பெண்ணை போலீஸார் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo