பங்காரு அடிகளார் காலமானார்- அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு  முதலமைச்சர் ஸ்டாலின்.

by Editor / 19-10-2023 09:58:06pm
பங்காரு அடிகளார் காலமானார்- அரசு  மரியாதையுடன் இறுதிச்சடங்கு  முதலமைச்சர் ஸ்டாலின்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (82) இன்று மாரடைப்பால் காலமானார். இந்நிலையில், பங்காரு அடிகளார் மறைவையொட்டி மதுராந்தகம் கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் இறுதிச் சடங்கின்போது 2ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என செங்கல்பட்டு காவல் துறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். மேலும்,தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அவரது பக்தர்கள் மேல்மருவத்தூர் நோக்கி வந்து குவியத்தொடங்கியுள்ளனர். பங்காரு அடிகளாரின் சேவையைப் போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படுமென முதலமைச்சர் ஸ்டாலின்  அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார்.

Share via

More stories