ஜாதி மறுப்பு திருமணம் ஆணவக் கொலை - குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு.
மேட்டுப்பாளையம் ஆணவக்கொலை வழக்கில் வினோத்குமார் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பை மீறி வர்ஷினி பிரியவை, கனகராஜ் என்பவர் திருமணம் செய்துகொண்டார். ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதி 2019ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த, வர்சினி பிரியா – கனகராஜ் ஆணவக் கொலை (இரட்டைக் கொலை) வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கனகராஜன் சகோதரர் வினோத்குமார் தனது கூட்டாளிகளின் உதவியோடு, காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கனகராஜ் மற்றும் வர்சினி பிரியா இருவரையும் வெட்டி படுகொலை செய்தார்.இந்த வழக்கில் கனகராஜ் சகோதரர் வினோத்குமார் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் இன்று (ஜன.29) தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி, அரிதினும் அரிதான வழக்கு என்பதால் மரண தண்டனை விதிப்பதாக கோவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் தீர்ப்பு வழங்கினார்.
Tags : ஜாதி மறுப்பு திருமணம் ஆணவக் கொலை - குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு.