தமிழையும், தமிழக மக்களையும் பெரியாரையும் இழிவுபடுத்தக்கூடிய கூலிக்காரர்கள்-கனிமொழி எம்.பி

by Editor / 30-01-2025 12:02:45am
தமிழையும், தமிழக மக்களையும் பெரியாரையும் இழிவுபடுத்தக்கூடிய கூலிக்காரர்கள்-கனிமொழி எம்.பி

தமிழையும், தமிழக மக்களையும் பெரியாரையும் இழிவுபடுத்தக்கூடிய கூலிக்காரர்களை எதிர்த்தும், ஆளுநராக இல்லாமல் அரசியல்வாதியாக செயல்படும் ஆளுநரை எதிர்த்தும் அரசியல் செய்யக்கூடிய சூழ்நிலையில் திமுக உள்ளதாக தென்காசி பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி ஆவேச பேச்சு

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் திராவிட மாடல் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நிகரான தகுதியான பெயர் சொல்லக்கூடிய தலைவர்கள் தமிழகத்தில் இல்லை. மாறாக தமிழ் தமிழ் எனக் கூறிக்கொண்டு தமிழையும் தமிழர்களையும் கொச்சைப்படுத்தக்கூடிய, பெரியாரை இழிவுபடுத்தக்கூடிய சில கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

மேலும், தமிழகத்திற்கு பொழுதுபோக்கிற்காக ஒரு ஆளுநர் இருந்து வருகிறார் அவர் ஆளுநராக இல்லை அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். சட்டமன்றத்திற்கு வருகை தந்து பாதியில் செல்வதற்கு அவர் வீட்டிலிருந்தே லீவு லெட்டரை முதல்வரிடம் கொடுத்து விடலாம் எனவும், அந்த வகையில் ஆளுநர் பதவி குறிப்பு என்னவென்றே தெரியாமல் அவர் செயல்படுவதாக கிண்டலாக கூறினார்.

மேலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை செய்வதற்கு எந்தவித நிதியை ஒன்றிய அரசு கொடுக்காமல் தமிழ் மொழியையும் தமிழக மக்களுக்கும் பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற ஒன்றிய அரசுக்கும் அவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகின்ற கட்சியினரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய சூழலில் திமுக உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிய அரசையும் ஆவேசமாக கனிமொழி எம்பி பேசி வந்த நிலையில் மேடையில் இருந்த சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் ராஜா மற்றும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் கண்டுகொள்ளாமல் தொலைபேசியை பார்த்துக் கொண்டு இருந்த சம்பவம் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சியை முடித்து கனிமொழி காரில்வெளியேறிய போது போக்குவரத்து நெரிசலை சரி செய்ய காவல்துறையினர் முண்டியடித்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags : தமிழையும், தமிழக மக்களையும் பெரியாரையும் இழிவுபடுத்தக்கூடிய கூலிக்காரர்களை எதிர்த்தும், ஆளுநராக இல்லாமல் அரசியல்வாதியாக செயல்படும் ஆளுநரை எதிர்த்தும் அரசியல் செய்யக்கூடிய சூழ்நிலை

Share via