சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தொல். திருமாவளவன் அறிவிப்பு .

by Admin / 05-04-2026 09:22:23pm
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தொல். திருமாவளவன் அறிவிப்பு .

 தமிழக சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டிருந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். தனக்கு பதிலாக அந்த தொகுதியில் மறைந்த எல். இளையபெருமானின் இளைய மகன் ஜோதி வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளார் என்றும் திமுக தலைமையிலான கூட்டணியின் ஒற்றுமையை காக்கவும் தான் மாநில அரசியலுக்கு வருவது குறித்த தவறான புரிதல்களை தவிர்க்கவும் இந்த முடிவு எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .சமூக நீதிக்காக போராடிய தலைவர் இளையபெருமாளின் குடும்பத்திற்கு மதிப்பளிக்கும் முகமாக அவரது மகனை வேட்பாளராக அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார் போர்க்களத்தில் பின்வாங்குவதும் ஒரு உத்தி தான் என்று குறிப்பிட்ட அவர் தேர்தல் நேரத்தில் தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags :

Share via

More stories

Logo