உங்கள் வாழ்க்கைக்காக போராடி நடு தெருவில் கத்தி கத்தி செத்து விடுவேன்-உணர்ச்சிவசப்பட்டு பேசி வரும்நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நமது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரக் கூட்டங்களிலே உணர்ச்சிவசப்பட்டு பேசி வருகிறார் .அந்த வகையில் அவர், நீங்கள் எனக்கு ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை., உங்கள் வாழ்க்கைக்காக போராடி நடு தெருவில் கத்தி கத்தி செத்து விடுவேன் என்று மிகுந்த வேதனையோடு பேசியதோடு குன்னூரில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது ,என்னை தோற்கடிப்பதற்கு பதிலாக என் சோற்றில் விஷம் வைத்துக் கொண்டு விடுங்கள் என்று மிகுந்த வேதனையோடு தெரிவித்தார். நான் வாக்குக்காக அரசியலுக்கு வரவில்லை என்றும் மக்களின் உரிமைக்காகவும் வரும் தலைமுறை நாளுக்காகவும் மட்டுமே போராடுவதாகவும் தனது பேச்சில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
Tags :


















