எஃப் -15 இ ஸ்ட்ரைக் ஈகிள் ஆகப் போர் விமானத்தின் இரண்டாவது அதிகாரியும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று எஃப் -15 இ ஸ்ட்ரைக் ஈகிள் ஆகப் போர் விமானத்தின் இரண்டாவது அதிகாரியும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு ஈரானின் வான் பரப்பில் அமெரிக்காவில் எஃப் -15 இ விமானம் ஈரானிய வாண் பாதுகாப்பு அமைப்புகளால் சூட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்திலிருந்து அதிகாரிகளும் பாராசூட் மூலம் குதித்தனர். அவர்களில் ஒருவர் உடனடியாக மீட்கப்பட்ட இரண்டாவது அதிகாரி ஈரானின் மலைப் பகுதிகளில் சுமார் 24 மணி நேரத்திற்கு மேலாக இருந்த அவரை பத்துக்கு மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் சிறப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படடனா். இந்த நடவடிக்கை அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் துணிச்சலான தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஒன்று என்றும் அதிபரால் வர்ணிக்கப்பட்டது. மீட்கப்பட்ட அதிகாரி காயம் அடைந்துள்ளதாகவும் ஆனால் அவர் நலமாக இருப்பார் என்றும் டொனாட் டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மீட்பு நடவடிக்கையின் போது அமெரிக்க தரப்பில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அனைத்து படையினரும் பாதுகாப்பாக திரும்பியதாகவும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Tags :



















