விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தென் மண்டல ஐ,ஜி.ஆலோசனை

by Editor / 25-08-2022 11:18:45pm
விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தென் மண்டல ஐ,ஜி.ஆலோசனை

 திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று தென் மண்டல காவல்துறை தலைவர்  அஸ்ரா கார்க்  தலைமையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ்குமார்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்   ப. சரவணன்   தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன்  ஆகியோர் முன்னிலையில் காவல் அதிகாரிகளுடன் இக்கூட்டத்தில் வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், புலன் விசாரணையில் உள்ள வழக்குகள், நீண்டகால நிலுவையில் உள்ள வழக்குகள், நிறைவேற்றப்பட வேண்டிய பிடியாணைகள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சாலை விபத்துகளை குறைப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டு தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்களால் அறிவுரை வழங்கப்பட்டது.மேலும்  போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு அவர்களின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்வது குறித்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உதவி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வெகுமதி வழங்கி ஊக்குவித்தார்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தென் மண்டல ஐ,ஜி.ஆலோசனை
 

Tags :

Share via
Logo