நான்கு மாடி விடுதி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்தக் கோர விபத்து

by Admin / 05-04-2026 09:37:51pm
 நான்கு மாடி விடுதி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்தக் கோர விபத்து

நேற்று மத்திய பிரதேச அனுப்பூர் மாவட்டத்தில் கோட்மா நகரில் அகர்வால் லாட்ஜ்  நான்கு மாடி விடுதி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்தக் கோர விபத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்து உள்ளதாகவும் பலியானவர்களில் அனுமன் யாதவ், ராமகிரி பால் யாதவ் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிகிறது .தேசிய பேரிடர் மீட்பு படை ,மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து  மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இடுப்பாடுகளிலிருந்து இதுவரை மூன்று பேர் உயிரோடு மீட்கப்பட்டு சாடோல் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .விடுதிக்கு அருகில் உள்ள இடத்தில் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட 12 அடி ஆழமான குழியில் தண்ணீர் தேங்கியால் கட்டடத்தின் அஸ்திவாரம் பலவீனம் மணந்து இந்த கட்டடம் சரிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒன்பது லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா 2.5 லட்சம் நிவாரண உதவித்து வழங்கப்படும் என்ற மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via
Logo