தடைசெய்யப்பட்ட  வெளிநாட்டு சிகரெட் விற்பனை செய்த நபர் கைது...

by Admin / 06-10-2021 11:57:56pm
தடைசெய்யப்பட்ட  வெளிநாட்டு சிகரெட் விற்பனை செய்த நபர் கைது...

சென்னை பூக்கடை பகுதிக்கு உட்பட்ட பல்வேறு கடைகளில் துறைமுகத்தில் இருந்து கடத்தி வரப்படும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை குடோனில் பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக பூக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பூக்கடை பந்தர் சாலை பகுதியில் உள்ள ஸ்டேஷ்ணரி கடையின் மேல்தளத்தில் உள்ள அறையை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் அந்த அறையில் அரசால் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பெருமளவில் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சிகரெட் பாக்கெட்டுகளை ரகசியமாக பதுக்கி விற்பனை செய்து வந்த சூளைப் பகுதியைச் சேர்ந்த கௌரவ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

 
மேலும், ரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.20 லட்சம் ரூபாய் மதிப்புடைய 80 பெட்டிகளில் இருந்த 2500 பாக்கெட்டுகள் அடங்கிய பிளாக் சிகரெட்டுகள் மற்றும் 2540 பாக்கெட்டுகள் அடங்கிய வூடாங் கிராம் சிகரெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வந்த கௌரவ்-வை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories