அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் செல்லமாட்டார் - வெள்ளை மாளிகை அறிவிப்பு
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவை உலக நாடுகள் கண்டித்து வருகின்றன. அதேநேரம் இந்த போரை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு ஆதரவு பெருகி வருகிறது. அந்தவகையில் பல நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கு நேரில் சென்று அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடம் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி ேஜா பைடனும் உக்ரைன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதி இருவரில் ஒருவரோ அல்லது ராணுவ மந்திரி அல்லது வெளியுறவு மந்திரியோ உக்ரைன் செல்வார்கள் என வெள்ளை மாளிகையை மேற்கொள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
ஆனால் இந்த தகவலை ஜோ பைடன் நிர்வாகம் மறுத்து உள்ளது. அதாவது ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் செல்ல மாட்டார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி உறுதிபட தெரிவித்தார்
Tags :