ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் - அமெரிக்க அதிபர் டொனால்ட்
ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் தெரிவித்துள்ளார்.. ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் மிகவும் முழுமை அடைந்து விட்டன என்றும் விரைவில் இது முடிவுக்கு வரும் என்று ட்ரம் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் கடற்படை விமானப்படை மற்றும் ஏவுகணை தளங்கள் பெருமளவில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே லெபனானில் நடந்து வரும் போரில் மார்ச் 2 முதல் இன்று வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேலிய தாக்குதலின் 33 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது .இந்த போரின் தொடக்கத்தில் ஈரானின் உச்ச தலைவர் இயதுல்ல அலி காமேனி கொல்லப்பட்டதை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உறுதிப்படுத்தி உள்ளன; இந்த போர் காரணமாக ,உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. ஈராலின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் மீதான தாக்குதலுக்கு பிறகு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. தற்போதைய சூழலில் முழுமையான போர் நிறுத்தத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புஎதையும் அதிபர் இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :



















