இன்று இடைநிலை ஆசிரியர்களின்  மூன்றாவது நாள் உண்ணாவிரதப் போராட்டம்

by Admin / 28-12-2025 03:12:06pm
இன்று இடைநிலை ஆசிரியர்களின்  மூன்றாவது நாள் உண்ணாவிரதப் போராட்டம்

இன்று இடைநிலை ஆசிரியர்களின்  மூன்றாவது நாள் உண்ணாவிரதப் போராட்டம் நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக இருப்பவர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்ற  கோரிக்கையை வலியுறுத்தி.. பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் 2009 ஆம் ஆண்டு மே 31ஆம் தேதிக்குப் பின் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும். அதற்கு முன் சேர்த்தவர்களுக்கும் இடையே உள்ள பெரும் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைத்து அதன் அடிப்படையில் தற்பொழுது போராட்டத்திலும் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.  போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக உணவு உட்கொள்ளாமல் போராடி வருவதால் சில ஆசிரியர்களின் உடல்நிலை சோர்வடைந்துடைந்து உள்ளதாகவும் தகவல். திமுக தன் தேர்தல் வாக்குறுதியில் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் என அறிவித்திருந்தது .ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைய நிலையில் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்று ஆசிரியர் சங்கம் அதிருப்த்தி தெரிவித்துள்ளது ..அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு காண வேண்டும் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிற நேரத்தில் அரசு சார்பாக பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் இதற்கு முன் தெரியாதவர்கள் என்றும் எங்களோடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ,அவர்கள் சார்பானவர்கள் மட்டுமே பேச்சு வார்த்தை நடத்தி சுகமான தீர்வுகாண  வேண்டும் என்றும் எங்கள் கோரிக்கை செவி சபிக்கப்படாமல் போனால் நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் ஆசிரியர்கள் என்றும் பாராமல் காவல்துறையினர் தங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

 

 

Tags :

Share via