அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மனைவி காலமானார்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மனைவி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மனைவி ஜீவா மதுசூதனன். இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மருத்துவர்கள் அவரை காப்பாற்ற தீவிரமாக சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தகவல்கள் வெளிவந்துள்ளனஇதனை அடுத்து மதுசூதனன் குடும்பத்தினருக்கு அதிமுக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த மதுசூதனன் மனைவி ஜீவா மதுசூதனனின் இறுதிச்சடங்கு விரைவில் நடைபெறும் என தெரிகிறது
Tags :