தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா.?
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா.?
ஒமைக்ரான் அதி வேகமாக பரவி வருகிறது.இதுவரை 80நாடுகளுக்கு பரவியுள்ளது. பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை யாக பல கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்து விட்டன.இந்தியாவிலும் இது வேகமாகப்பரவி வருவதால்,ஒவ்வொரு மாநிலங்களும் சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டிருக்கின்றன.இந்திய அளவில் ஒமைக்கரான் பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளது.இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,"நைஜீரியாவிலிருந்து வந்த ஒருவர் ஒமைக்ரான் பாதிப்பற்கு உள்ளாகியுள்ளார். இந்தியாவில் ,தமிழ்நாடு ஒமைக்ரான் பாதிப்பில் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஓமைக்ரான் பாதிப்படைந்த அனைவரும் இரண்டு கட்ட தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள்.அறிகுறியே இல்லாத தொற்றாக உள்ளது ஒமைக்ரான் பாதித்தவர்களை நான்கு அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகறோம். இதுவரை வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 24 பேருக்கு எஸ் ஜீன் டிராப் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.அவர்களது மாதிரி சேகரிக்கப்பட்டு மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இன்று அல்லது நாளை முடிவுகள் வரலாம்." என்று கூறினார்.இதனால்,தமிழகத்தில் ஊரடங்கு குறித்து முதல்வர்ஒரு சில நாளில் ஆலோசனைக்கூட்டம் நடைெபறும்.
|
Tags :