தி.மு.க அரசு அறிவித்துள்ள புதிய உறுதிப்படுத்த ஓய்வூதிய திட்டம் ஏமாற்றும் செயல் -அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

by Admin / 11-01-2026 01:15:07am
தி.மு.க அரசு அறிவித்துள்ள புதிய உறுதிப்படுத்த ஓய்வூதிய திட்டம் ஏமாற்றும் செயல் -அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக அரசு புதிய உறுதிப்படுத்த ஓய்வூதிய திட்ட அரசாணை வெளியிட்ட பின்பு தமிழக எதிர்க்கட்சி தலைவர் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை பெயரை மட்டும் மாற்றி புதிய உறுதிப்படுத்த ஓய்வூதிய திட்டம்[TAPS ]என்ற பெயரில் தி.மு.க அரசு அறிவித்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார் இது புதிய முந்தையில் பழைய கள் என்ற பழமொழிக்கேற்ப அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயல் என்று அவர் குறிப்பிட்டார்.. 2026 இல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காகவும் அரசு ஊழியர்களின் போராட்டங்களை தற்காலிகமாக சமாளிக்கவும் இந்தத் திட்டத்தை ஒரு ஏமாற்று வேலையாக திமுக அரசு கையில் எடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்சி உள்ளார். 2021- வது தேர்தலின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சி முடியப் போகும் நேரத்தில் இத்தகைய திட்டத்தை அறிவிப்பது அரசு ஊழியர்களுக்கு கிடைக்க முடியும் துரோகம் என்றும் அவர் கூறியுள்ளார் .பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பு ஏதுமில்லை ஆனால் இந்த திட்டத்தில் பங்களிப்பு தேவைப்படுகிறது இது ஒரு ஏமாற்று மாடல் திட்டம் என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.

தி.மு.க அரசு அறிவித்துள்ள புதிய உறுதிப்படுத்த ஓய்வூதிய திட்டம் ஏமாற்றும் செயல் -அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
 
Tags :

Share via

More stories

Logo