க பினியில் இருந்து வெளியேறும் நீர் பிலி குண்டுலுவை ஆகஸ்ட் மூன்றாம் தேதி அல்லது நான்காம் தேதிக்குள் வந்து அடையும்.
கர்நாடகாவில் செய்து வரும் கனமழை காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான கபினி அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் முதல் 27 ஆயிரம் கன அடி வரை வெளியேற்றப்பட்ட வருகிறது. க பினியில் இருந்து வெளியேறும் நீர் பிலி குண்டுலுவை ஆகஸ்ட் மூன்றாம் தேதி அல்லது நான்காம் தேதிக்குள் வந்து அடையும் என்று தெரிகிறது. காவிரி நீர் ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு தினசரி 3500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டிருந்தது தற்போது அணை நிரம்பியுள்ளதால் ஒவ்வொரு நேரம் முழுமையாக தமிழகத்திற்கு வழங்குகிறது கர்நாடகா அரசு. காவிரி நீர் வரத்தால் டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடி பணிகளுக்கு பெரும் உதவிகரமாக இருக்கும். இன்று ஆடிப்பெருக்கு என்பதனால் டெல்டா மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு தாலி பிரித்து கொண்டாடும் நிகழ்வு வெகு விமர்சனமாக நிகழ்த்தப்படுவதோடு புதுநீர் வரவையும் பூக்கள் தூவி பூஜைகள் செய்து மக்கள் வரவேற்பு நிகழ்த்துவர்.
Tags :



















