சபரிமலை ஐயப்பன் கோவிலில் அறுவடை காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் நிறை புத்ரி பூஜை

by Admin / 03-07-2024 09:52:33am
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அறுவடை காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் நிறை புத்ரி பூஜை

கேரள மாநிலம் பத்தனம்தெட்டை மாவட்டத்தில், புண்ணிய நதி ஓடும் பம்பா நதிக்கரையில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெறும். அதில் ஒன்றுதான் நிறை புத்திரிபூஜை. சபரிமலை யாத்திரை , இருமுடி கட்டி நெய்அபிஷேகம் செய்தல் மட்டுமின்றி மகர விளக்கு பூஜையோடு நடத்தப்படும் நிறைப்புத்ரி பூஜையும் குறிப்பிடத்தக்கது.

இது சபரிமலை ஐயப்பன் கோவிலில் அறுவடை காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது இந்த திருவிழாவின்போது  பூஜை வழிபாடு நடத்தும் மத குருமாா்கள் நெல் கூர்முனைகளில் பூஜை செய்கிறார்கள். இது அறுவடையோடு தொடர்புடைய விவசாயத்தின் செழிப்பை பறைசாற்றும் பூஜையாகும்.

 பூஜை முடிந்த பின்பு நெற்கதிர்களை பக்தர்களுக்கு வழங்கும் நிகழ்வு நடைபெறும். இது சபரிமலையில் நடைபெறும் மிக முக்கிய விழாவில் ஒன்றாகும்..

சபரிமலையில் நிறைபுத்தரி பூஜை ஒவ்வொரு ஆண்டும் கடக ( ஆடி) மாதத்தில் நடைபெறும். மாத பிறப்பில் நடை திறக்கும் நாள் அல்லாமல்  நிறைபுத்தரி பூஜைக்காகவே பிரத்யேகமாக நடை திறக்கப்படும். திருவாங்கூர் கொட்டாரத்தில்   அதற்கான தேதி குறிக்கப்பட்டு அதை திருவாங்கூர் தேவசம்போர்டிற்கு தெரிவிப்பார்கள். திருவாங்கூர் தேவசம்போர்டு அந்த தேதியை உறுதி செய்து அறிவிக்கும். அதன்படி இந்த வருடம் 12-08-2024 திங்கட்கிழமை காலை 5 மணிக்கு நிறைபுத்தரி பூஜை நடைபெறும் என திருவாங்கூர் தேவசம்போர்டு  அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அறுவடை காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் நிறை புத்ரி பூஜை
 

Tags :

Share via