திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர் கல்லூரி விடுதியில் உயிரிழப்பு.

சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சக்தி என்கிற மாணவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி நான்காம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இந்த நிலையில் விடுதியில் உள்ள அறையில் நள்ளிரவு படித்துவிட்டு விடுதியில் தூங்கிய மாணவர் தூங்கிய நிலையில் காலையில் அவரது அறை திறக்கப்படாமல் இருந்துள்ளது.
சக மாணவர்கள் அறையை திறந்து பார்த்த பொழுது படுத்த படுக்கையிலேயே மாணவர் உயிரிழந்தது தெரிய வந்தது. உடனடியாக மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைத்துள்ளனர்.
மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா அல்லது தற்காலையா என்பது குறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags : திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர் கல்லூரி விடுதியில் உயிரிழப்பு